in

லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி

லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி

மார்டின் குழுமம் மற்றும் ரோட்டரி இண்டர்நேஷனல் இணைந்து CSR நிதியில் இருந்து PIMS மருத்துவமனை,குளூனி மருத்துவமனை, 3 டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் கிட்னி சென்டர் மருத்துவமனைக்கு 7 டயாலிசிஸ் இயந்திரங்கள் என மொத்தம் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

டயாலிசிஸ் இயந்திரங்களை மார்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது தாயாரும் மார்டின் குழுமத்தின் இயக்குநருமான டாக்டர். லீமா ரோஸ்  மார்டின் ஆகியோர் வழங்கினார்கள்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,
புதுச்சேரி முழுவதும் குடிநீர் பிரச்சினை என்பது பெரிய அளவில் உள்ளது, அதனை சரி செய்ய சிங்கzப்பூரை சேர்ந்த CPG நிறுவனத்துடன் சேர்ந்து திட்டங்களை வகுத்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், விரைவில் உறுதி செய்யப்பட்டு, ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார், மேலும் அரசியல் என்பது விளையாட்டு அல்ல மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம்.

அதன் காரணமாகவே பொறுமையாக நகர்வுகளை மேற்கொள்வதாகவும், மக்களுக்கு என்ன தேவையோ அதனை நாங்கள் செய்வோம் என கூறினார், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காரைக்கால் சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்ததாகவும்.

டெல்லிக்கு அழைத்தாலும் செல்வேன் எனவும் அவர் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

What do you think?

The Ultimate Guide to Roulette Bonuses in the UK