in

பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

 

சபரிமலை சீசன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரிப்பு.

மூன்று முதல் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், சபரிமலை சீசன் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு வந்துள்ளனர்.

மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில், ரோப் கார் நிலையம், விச் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதிகப்படியான பக்தர்கள் வருகையால் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலையேறவும் , படிப்பாதை வழியாக கீழ் இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலைக்கோயில் மற்றும் கிரிவலம் பாதையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

What do you think?

அழகிய நம்பிராயா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்காக கால்நாட்டு வைபவம்

உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்