in

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய அலுவலகக் கட்டிடம் இன்று திறப்பு விழா 

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய அலுவலகக் கட்டிடம் இன்று திறப்பு விழா 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

2023–24 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.579.66 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டத்தின் கூடுதல் ஆட்சியர் பத்மஜா தலைமையில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் ஆர்.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும்,செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்,மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்,திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

What do you think?

புதுச்சேரியிலும் வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் சிரமம்

பார்த்திபனைப் பிரித்து மேய்ந்த த்ரிஷா! விஜய் – த்ரிஷா விவகாரம், என்ன நடந்தது? தக்க பதிலடி!