in

சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிலிண்டர் கட்டுப்பாட்டை கண்டித்து நூதன முறையில் போராட்டம்.

சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிலிண்டர் கட்டுப்பாட்டை கண்டித்து நூதன முறையில் போராட்டம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போரின் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவை இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதால் தற்போது தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு என்பது அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால்.

ஹோட்டல் வியாபாரிகள் கேஸ் இன்றி கடைகளை செயல்படுத்த முடியாமல் மூடுவதாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது கேஸ் தீ இன்றி சமையல் செய்ய முடியாமல் ஹோட்டல் உரிமையாளர்கள் படும் பாட்டில் உணர்த்தும் வகையில் அடுப்பில் அரிசி மற்றும் சமையல் பொருட்களை கொட்டி தீ இன்றி அதனை கிண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்தியாவிற்கு நட்பு நாடாக இருக்கும்போது இந்தியாவிற்கு ஏன் கேஸ் மற்றும் எரிபொருள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

என்றும் அதனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

என்றும் கேஸ் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கேஸ் தட்டுப்பாட்டில் இருந்து மேலும் வரை அரசு வரிகளை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு வியாபாரிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

என்று கோரிக்கை விடுத்தனர் அதேபோல் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கேஸ் கட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கேஸ் தட்டுப்பாடு என்பது மக்களின் ஜீவாதார பிரச்சனை என்றும் ஹோட்டல்கள் இல்லாததால் தங்கி வேலை செய்யக்கூடிய நபர்கள் மற்றும் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் மிகுந்த இந்நிலை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.

What do you think?

மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா? காங்கிரஸ் கமிட்டி மாநில பொறுப்பாளர் நிவேதித் அல்வா பதில்.

அஜித்தின் ‘திக் திக்’ நிமிடங்கள்! துபாய் டூ சென்னை எப்படி வந்தார்? வைரல் வீடியோ