வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா
தற்பொழுது வரும் படங்களின் பாடல்கள் ஹிட் ஆகுதோ? இல்லையோ ?ஹிட் அடித்த பழைய பாடல்களை பயன்படுத்தினால் தியேட்டர் ரெஸ்பான்ஸ் செமையாக இருக்கிறது.
மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இளையராஜா இசை அமைத்த கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலால் படத்திற்கு மாபெரும் ஹிட் கிடைத்தது.
தற்போதுவரும் எல்லாம் படங்களிலும் ஹிட் ஆன பாடல்களை பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக இளையராஜா பாடல்களை பயன்படுத்துவதால் காண்டான இளையராஜா என் பாடலால் தான் உங்கள் படத்திற்கு வெற்றி கிடைகிறது என்று கூறி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
இன்று ரிலீஸ் …ஆன மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்தியதால் வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் கதாநாயகியாகவும் Robot மாஸ்டர் கதாநாயகனாகவும் நடிக்க’ அவரின் மகள் ஜோவிதா இப்படத்தை தயாரித்துள்ளார், மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் இளையராஜா இசையமைத்த சிவராத்திரி என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்பாடலுக்கு வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் கிளாமராக நடனம் ஆடி யுள்ளனர்.
பாடல் வெளியான பொழுது அதில் இளையராஜாவுக்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இளையராஜாவிடம் அனுமதி வாங்கி இருப்பதாகவும் கூறி இருக்கின்றேன் ..
ஆனால் இளையராஜா தன்னிடம் அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.