இந்த ஷிப்…பிலும் அவ்வளோ சீக்கிரம் மாட்டிக்கொள்ள மாட்டேன்
முதல் படமான டிராகன் வெளியானதிலிருந்து, கயாடு லோஹர் என்ற பெயர் சமூக ஊடகங்களில் அதிகம் Follow செய்யப்படும் நபர் அவரது கவர்ச்சிகரமான புன்னகையால் எகப்பட்ட ரசிகர்களின், இதயங்களில் இடம்பிடித்துள்ளார்..
தற்பொழுது அதர்வாவுடன் இதயமுரளி என்ற திரைப்படத்தில் சிம்புவின் 49 வது படத்திலும் இணைந்திருக்கிறார் டைம்ஸ் நவ் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நடிப்பு என்பது எனது தொழில் மட்டுமல்ல, அது எனது ஆசை அதை நான் என் கடைசி மூச்சு வரை தொடர்ந்து செய்வேன்.
அதையும் தாண்டி, சமூகத்திற்கு இன்னும் பெரிய அளவில் திருப்பித் தர விரும்புகிறேன். நான் ஏற்கனவே முதியோர் இல்லங்கள் மற்றும் விலங்கு நலனுக்காக உதவி செய்து வருகிறேன், நான் நன்றாக சம்பாதித்தால், மிகப் பெரிய அளவில் பங்களிக்க விரும்புகிறேன்.
மேலும், திரைக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வதில் நான் எப்போதும் ஆர்வமாக உள்ளேன், சரியான வாய்ப்பு வந்தால்( அரசியலுக்கு வருவாரோ), சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புகளை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.”
இவரிடம் ரிலேஷன்ஷிப் பற்றி கேட்ட பொழுது அதற்கு கயாடு இன்றைய தலைமுறை புது புது வார்த்தைகளுக்கு புது புது அர்த்தங்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.
நீங்கள் கூறுவது போல் எனக்கு தெரிந்த ஒரே ஷிப் கப்பல் தான் நீங்கள் கூறுவது போல் ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என பல ஷிப்…கள் வந்துவிட்டன நீங்கள் நினைக்கிற பொண்ணு நான் இல்லை நான் ரொம்ப நல்ல பொண்ணு இப்ப வரைக்கும் நான் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை அவ்ளோ சீக்கிரம் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் நான் மாட்டிக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.