நம்பி போனேன் பிச்சை எடுக்க விட்டுட்டாரு
இந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20, 2025) தனுஷின் குபேரா வெளியாக உள்ளது.
சேகர் கம்முலா இயக்கிய இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளுக்கு ஏற்கனவே சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழில் மட்டும் சிறு மாற்றம் செய்துள்ளனர்.
குபேரா படத்தில் ஏழு இடத்தில் சென்சார் போர்டு வெட்டு போட்டுள்ளது. அப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் இயக்குனரை பற்றி நடிகர் தனுஷ் பகிர்ந்ததாவது.
சேகர் கம்முலாவை ஒரு அற்புதமான, தூய்மையான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.
திரைப்படத் தயாரிப்பில் அவரது ஆற்றல், நேர்மறை மற்றும் நேர்மையை பாராட்டினார். நான் கிரே Man படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த பொழுது இயக்குனர் சேகர்கமுலா என்னிடம் கதை சொன்னார் நானும் ஓகே சொன்னேன்.
அதன் பிறகு இரண்டு வருடத்திற்கு அவர் அந்த படம் பற்றி என்னிடம் பேசவில்லை நானும் அது பற்றி யோசிக்கவில்லை Script முடித்துவிட்டு மீண்டும் என்னிடம் அது பற்றி கேட்டார் நானும் ஓகே சொல்லிவிட்டேன் சரி பெரிய இயக்குனர் கதை நல்லா இருக்குது நடிப்போம் அப்படின்னு சொல்லிட்டு இயக்குனரை நம்பி வந்தால் திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் கொளுத்துற வெயில்ல என்ன பிச்சை எடுக்க விட்டுட்டாரு கை நீட்டி பிச்சை எடுக்கும் போது தான் நாம் ஓடும் ஓட்டம் எந்த அளவுக்கு அர்த்தம் இல்லாதது என்பதை நான் புரிந்து கொண்டேன் பணத்திற்காக அவங்க நல்லா இருக்க கூடாது இவங்க நல்லா இருக்க கூடாது..இன்னு நினைக்கிரோம் நாம எதற்காக வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.
முன்னாடி எல்லாம் நாம் பெரிய ஆளாக வேண்டுமென்று உழைப்போம் இப்ப எல்லாம் அடுத்தவனை கெடுக்கறதுக்காக ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒரு வாட்டி இப்படி கையேந்துங்கள் திங்குற ஒரு வேலை சோத்துக்கும் மழை வெயில் என்று ஒதுங்குற கூரைக்கும் எவ்வளவு நன்றியோடு நாமெல்லாம் இருப்போம் என்று புரியும் என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.