in

ராகுல் காந்தி கனிமொழி சந்திப்பில் 41 சீட் கேட்டது குறித்து எனக்கு தெரியல அதிகாரிகள் இருப்பதால் அரசியல் வேண்டாம் என்று கூறினார்

ராகுல் காந்தி கனிமொழி சந்திப்பில் 41 சீட் கேட்டது குறித்து எனக்கு தெரியல அதிகாரிகள் இருப்பதால் அரசியல் வேண்டாம் என்று கூறினார்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் தஞ்சையில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.முன்னதாக தஞ்சை கள்ளுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப் பெருந்தனக தமிழ்நாட்டில் முன்மாதிரியான மருத்துவமனையாக குழந்தை இறப்பு விகிதத்தை முழுமையாக குறைத்து இருக்கிறார்கள் இது பாராட்டக்கூடியது என்றார்

கண் அறுவை சிகிச்சையும் மகப்பேறு பிரசவமும் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டமாக தஞ்சை உள்ளது இதில் தஞ்சை மாவட்டம் முன்னுதாரண மாவட்டமாக திகழ்வது பாராட்டுக்குரியதாக உள்ளது என்ற செல்வப் பெருந்தகை மாவட்ட ஆட்சியரை பாராட்டினார்.

ராகுல் காந்தி கனிமொழி சந்திப்பில் 41 எம்எல்ஏ சீட் ஒரு ராஜ்யசபா சீட் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு எனக்கு தெரியவில்லை அது உண்மை அல்ல என்ற செல்வப் பெருந்தகை அது தெரிந்து இருந்தாலும் பத்திரிகைகளுக்கு சொல்வது நாகரீகமாக இருக்காது. ஒப்பந்தம் கையெழுத்திடும் பொழுது அது பற்றி கண்டிப்பாக சொல்வேன் என்று கூறினார் செல்வப் பெருந்தகை.

What do you think?

நாமக்கல் நகர் சாய்பாபா ஆலயத்தில் குரு விழாயக்கிழமை முன்னிட்டு சிறப்புபூஜை மங்கள ஆர்த்தி ஏராளமானவர்கள் தரிசனம்

ராதிகாவோட கெட்டப்பை பார்த்து பாராட்டிய உலகநாயகன்