in

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் 4 வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் 4 வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை… வீட்டைச் சுற்றி குளம் போல் மழைநீர் தேங்கிதால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தின் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை என்பது பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக பரவலாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி , கான்சாபுரம், தம்பிபட்டி , கோட்டையூர் ,மகாராஜபுரம் அத்திகோயில் பிளைக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் 4 நாளாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது..

இந்த நிலையில் இந்த கனமழை காரணமாக கூமாபட்டி பகுதியில் வீட்டை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் மழை நீரில் மிகுந்த சிரமத்துடன் வீட்டிற்கு சென்றனர்.தொடர்ந்து மழைக் காலங்களில் இது போல் மழை நீர் தேங்குவதாகவும் மழை நீர் தேங்காமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

What do you think?

ராஜபாளையம்  பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கத்தால் மாணவர்கள் சிரமம்

அமெரிக்கா மிரட்டியவுடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 14 சதவீதம் குறைத்து விட்டது இந்தியா