மயிலாடுதுறையில் மூன்றாவது நாளாக தொடரும் கனமழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடரும் கனமழை, அதிகபட்சமாக மணல்மேடு பகுதியில் ஒன்பது சென்டிமீட்டர் அதிகமாக மழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இரவு நேரங்களில் மழை பெய்த நிலையில், நேற்று மாலை முதல் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணல்மேட்டில் 96மில்லி மீட்டர் மழையும், கொள்ளிடம் பகுதியில் 77 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதுபோல் மயிலாடுதுறை 32 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் 42 மில்லி மீட்டர், சீர்காழி 43 மில்லி மீட்டர், பொறையார் 44 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான வயல்களில் தண்ணீர் சேர்ந்துள்ளது.


