in

 பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்தார்

 பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்தார்

 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் 51 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாநிலத் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்தார்…

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் பூசாரி சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஏற்பாட்டில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி 51.வது பிறந்த நாள் கொண்டாடும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு கோவிலில் விளக்கு ஏற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, அதனைத் தொடர்ந்து தங்க தேருக்கு பூஜைகள் செய்து கோவில் பிரடகத்தில் தங்க தேரினை இழுத்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

What do you think?

மேல்மலையனூர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை …

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து அவதூர் பரப்பிய திமுக அணி பிரிவினர்.