in

இடைவிடாது 45 நிமிடங்கள் சிலம்பம் கலை அரங்கேற்றி உலக கின்னஸ் சாதனை

இடைவிடாது 45 நிமிடங்கள் சிலம்பம் கலை அரங்கேற்றி உலக கின்னஸ் சாதனை

 

புவனகிரி அருகே தலைகுளம் பகுதியில் இடைவிடாது 45 நிமிடங்கள் சிலம்பம் கலை அரங்கேற்றி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்கள் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தலைகுளம் பகுதியில் இந்திய தேசிய 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் தலைக்குளம் இளைஞர்கள் குழு சார்பில் மாபெரும் கின்னஸ் உலக சாதனை சிலம்பம் அரங்கேற்றம் நடைபெற்றது.

இதில் சிலம்பப் பள்ளி மாணவர்கள் சுமார் 60 மாணவர்கள் தொடர்ந்து 45 நிமிடம் இடைவிடாது சிலம்பம் கலையை வெக்காளியம்மன் கோவில் திடலில் அரங்கேற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்க சுரேஷ் தேசிய பொதுச்செயலாளர் லிவிங்ஸ்டன் தாஸ் மருதூர் காவல் உதவி ஆய்வாளர் பொன்மகரம் ஆகியோர் மாணவர்களை பாராட்டி மடல் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

What do you think?

அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர் கோயிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிழாக்கு பூஜை