ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில்
மகா கும்பாபிஷேக விழா
இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு யாகங்கள், வேத மந்திர ஓதல்கள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மங்கல இசை உடன் மேளதாளம் முழங்க கலச புறப்பாடு நடைபெற்றது.
திருக்கோவிலில் உள்ள விமான கோபுரங்கள் மற்றும் மூலவர் கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா என பக்தி கோஷங்கள் எழுப்பி வணங்கினர்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.


