மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…
மயிலாடுதுறை மாப்படுகை, கவரத் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய 24 வயது மகன் குகன் .
இவர் மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து 1கிலோ 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.இதையடுத்து கஞ்சா விற்பனை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் குகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின்,மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில்,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் குகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்படி மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் குகனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சமூகவிரோதசெயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள்
பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு காவல்
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


