விஜய் ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் “பிப்ரவரி 20-ல ரிலீஸ்க்கு வாய்ப்பு?
விஜய்யோட கடைசி படம்னு அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுறதுல ஏகப்பட்ட சிக்கல்கள்.
பொங்கலுக்கே வர வேண்டிய படம், சென்சார் போர்டு கொடுத்த குடைச்சலால தள்ளிப்போயிட்டே இருந்துச்சு. இப்போ ஒரு வழியா நல்ல செய்தி வர்ற மாதிரி தெரியுது!
ஜனவரி 9-ஆம் தேதியே படம் ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனா, தணிக்கை வாரியம் (Censor Board) சில சர்ச்சையான காட்சிகளைச் சுட்டிக்காட்டி சான்றிதழ் கொடுக்க மறுத்துட்டாங்க. இதனால தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் வரைக்கும் போயும் பலன் இல்லை.
இப்போ படம் ரிவைசிங் கமிட்டி கிட்ட இருக்கு. அவங்க சொன்ன மாற்றங்களைச் செய்ய படக்குழு ஒத்துக்கிட்டதா ஒரு பேச்சு ஓடுது. சர்ச்சையான சீன்கள் எல்லாத்தையும் தூக்குனா, படத்தோட நீளம் 20 நிமிஷம் வரைக்கும் குறையும்னு சொல்றாங்க.
ஆனா, படக்குழு தரப்புல இருந்து இதைப் பத்தி இன்னும் அதிகாரப்பூர்வமா எதுவும் சொல்லல. எல்லா சிக்கல்களும் ஒரு வழியா முடிஞ்சு, சான்றிதழ் கிடைச்சுட்டா வர்ற பிப்ரவரி 20-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைக்கு வர அதிக வாய்ப்பு இருக்காம்! இதைக் கேட்ட தளபதி ரசிகர்கள் இப்போ செம குஷியில இருக்காங்க.

