வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவிற்கு தங்க கிரீடத்தால் முடிசூட்டும் நிகழ்ச்சி
புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவிற்கு தங்க கிரீடத்தால் முடிசூட்டும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனையொட்டி கடந்த 6ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிமான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடந்தது.
தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர்
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உள்ள மாதாவின் உருவத்திற்கு தங்ககிரீடத்தை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் முடி சூட்டினார்.

பேராலய அதிபர் இருதயராஜ், துணை அதிபர் அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து தேர்பவனி திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.


