மதுரையில் ரஜினியின் கூலி படத்திற்கு இலவச டிக்கெட்
மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் ஜாபர் பாலசந்தர் தலைமையிலான ரஜினி ரசிகர்கள் கூலி படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகெங்கிலும் வெளிவர உள்ளது.
அதனை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கூலி திரைப்படத்தின் முதல் காட்சி ரசிகர் மன்ற சிறப்பு கட்சியாக திரையிடப்பட இருக்கிறது.
இந்த வருடம் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து 50 வது வருட பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதை முன்னிட்டு ஏழை எளிய நலிந்த ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு கூலி படத்தின் முதல் காட்சி ரசிகர் மன்ற சிறப்பு காட்சியின் டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த இலவச டிக்கெட் வழங்கும் நிகழ்வினை முன்னிட்டும் ரஜினியின் கூலி படம் வெற்றி பெற வேண்டியும் ரஜினிகாந்த் மேலும் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தும் மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரஜினியின் கூலி பட முதல் காட்சி ரசிகர் மன்ற சிறப்பு காட்சி டிக்கெட்டுகளை ஏழை எளிய ரஜினி ரசிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக மதுரை மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் ஜாபர் மதுரை மாவட்ட ரஜினி காந்த் இளைஞர் அணி பொறுப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட ரஜினி ரசிகர்கள் வழங்கினார்கள்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


