in

உரிமைத்தொகை பெறும் மகளிருக்கு இன்று 5000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து  முன்னாள் அமைச்சர் MLA பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

உரிமைத்தொகை பெறும் மகளிருக்கு இன்று 5000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து  முன்னாள் அமைச்சர் MLA பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நினைவாகப் பெயரிட்டுள்ளனர் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1.31கோடி பெண்களுக்கு பிப்ரவரி, மார்ச்,ஏப்ரல் மாதங்களுக்கு ரூபாய் 3000 மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பாக 2,000 ரூபாய் என மொத்தம் 5,000 ரூபாய் என தமிழ்நாடு முதலமைச்சர் .

இன்று காலையில் அறிவிப்பு செய்து காலை முதலே மகளிர்களின் அவர் அவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

இச்சம்பவத்தை வரவேற்கும் விதமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் திமுக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் MLA தலைமையில் திமுக-வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் விஜியக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மொக்தியார் மஸ்தான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

What do you think?

Живая рулетка: как онлайн‑казино Казахстана меняет правила игры

Как понять, что слот на отдаче