மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் வெளிநாட்டவர்கள் உணவு வழங்கி மகிழ்ச்சி
மயிலாடுதுறையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் வெளிநாட்டவர்கள் உணவு வழங்கி மகிழ்ச்சி
வெளிநாட்டவர்கள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் செல்பி எடுத்து பரிசுகள் வழங்கி நெகிழ்ச்சியுடன் சென்றனர்.

மயிலாடுதுறையில் அமைந்துள்ள மனநலம் குன்றிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று உணவு வழங்கி, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த வெளிநாட்டவர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள 54 – அடி உயர சிவலிங்க ஆலயத்தின் கும்பாபிஷேக மண்டல அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு ஜெர்மனி, ரஷ்யா, உக்ரைன், லண்டன் உள்ளிட்ட 15 நாடுகளைச் சார்ந்த 45 வெளிநாட்டு பயணிகள் ஆன்மீகப் பயணமாக மயிலாடுதுறைக்கு வந்துள்ளனர்.
மயிலாடுதுறையில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் இந்த அன்பகம் குறித்து கேள்விப்பட்டு அன்பாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

மேலும் நடக்க முடியாத வாய் பேச முடியாத, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் ஆடி பாடி அவர்களை மகிழ்வித்தனர், அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டு பரிசுகள் வழங்கினார்கள், இந்த நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


