சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு படம் இரண்டு கிளைமாக்ஸ்
இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக, ஒரு படம் இரண்டு வெவ்வேறு version…னுடன் திரையரங்குகளுக்கு வருகிறது -….
ஹவுஸ்ஃபுல் 5A மற்றும் ஹவுஸ்ஃபுல் 5B – ஒரே நேரத்தில் வெளியாகிறது, ஹவுஸ்ஃபுல் 5 வழக்கமான நகைச்சுவைப் படம் அல்ல.
20 மாடிகளைக் கொண்ட ஒரு ஆடம்பரமான பயணக் கப்பலில் சிரிப்பும் மர்மமும் கலந்த Thriller படம்.
ஒரே வாரிசு என்று கூறிக் கொள்ளும் மூன்று ஆண்கள் ஒரு கோடீஸ்வரரின் செல்வத்திற்காகப் போராடுகிறார்கள். ஆனால் ஒரு கொலை நடக்கும்போது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
ரசிகர்கள் எந்த பாகத்தை பார்க்கிரார்கள் என்பதைப் பொறுத்து கொலையாளியும் மாறுகிறார். எனவே, ஹவுஸ்ஃபுல் 5A இல், ஒருவர் கொலைகாரர். ஹவுஸ்ஃபுல் 5B இல், வேறொருவர்.
அதே கதை, அதே நடிகர்கள் – ஆனால் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள்!
இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக. இரண்டு பதிப்புகளும் CBFC-யால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரே நாளில் திரையிடப்படுகின்றன – சில திரைகள் 5A ஐயும், மற்றவை 5B ஐயும் ரிலீஸ் செய்யும்.
சில திரையரங்குகள் இரண்டு Version…னையும் வெவ்வேறு ஷோ டைம்…மில் திரையிடுகின்றனர்.
2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓட கூடிய இப்படத்தில்அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சஞ்சய் தத், நானா படேகர் மற்றும் இன்னும் பல நட்சத்திரங்களுடன் – 375 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப் படத்தை தருண் மன்சுகானி இயக்கியுள்ளார் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது .
தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா, “ஏன் த்ரில்லர் படங்களில் ஒரே ஒரு கிளைமாக்ஸ் இருக்க வேண்டும்?” ஹவுஸ்ஃபுல் 5 பாலிவுட் விதிகளை மாற்றி எழுதுகிறது.
நீங்கள் 5A, 5B, அல்லது இரண்டையும் பார்த்தாலும் சரி ஆனால் – குழப்பம், நகைச்சுவை, மற்றும் ஆச்சரியத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.