in

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் உடனடியாகச் சென்னையிலிருந்து விரைந்து வந்து, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்வையிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வெ. கணேசன், உயிரிழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

மேலும், “முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும், ஈமச்சடங்குகளுக்காகத் தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும்,” என்று அறிவித்தார்.

இந்தச் சோக நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சருடன் உடனிருந்தனர்.

What do you think?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

திருப்பரங்குன்றம் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா