in

நீதிமன்றத்தில்….. மனுதாக்கல்


Watch – YouTube Click

நீதிமன்றத்தில்….. மனுதாக்கல்

 

ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது உரிமைகளைப் பாதுகாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மற்றும் வணிக தயாரிப்புகளில் தனது பெயர், மற்றும் புகைப்படங்கள் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

பிரபல நடிகர் நடிகைகளின் படங்கள் மற்றும் பெயர்களை வைத்து தங்கள் பொருளுக்கு விளம்பரம் தேடிக் கொள்வது வியாபாரிகளின் யுக்தி.

நீதிபதி தேஜஸ் கரியா தலைமையிலான நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது, ராய் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, வணிக ஆதாயம் மற்றும் தனது விளம்பரதிற்காக ராய் அனுமதியின்றி அவர்களது புகைப்படத்தை வெளியிடுவது தவறு என்று தெரிந்தும் பல நிறுவனங்கள் இந்த தவறை செய்து வருகின்றன.

மேலும் AI டெக்னாலஜியை பயன்படுத்தி தவறான வீடியோக்களை உருவாக்கி தன் நற்பெயரை கெடுத்து பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், விளம்பர உரிமைகளை மீறுவதாகவும் அவரை வைத்து பலர் சம்பாதிப்பதாகவும் ஐஸ்வர்யா ராயின் வால்பேப்பர்களை பயன்படுத்தும் இணையதளங்களின் பெயர்கள் மற்றும் அவரை வைத்து தவறான வீடியோக்களை வெளியிட்ட Youtube சேனல்களையும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

இசையமைப்பாளரை கரம் பிடித்த நடிகை கிரேஸ் ஆண்டனி

It tally with a tale of ‘Italy shop’