விவசாயிகள் கருப்புகொடி ? காவல் துறை சிஸ்டம் சரியில்லை என்று காவல்துறை அதிகாரி ராஜினமா?
என ஆட்சியின் லட்சணம் கண்கூடாக தெரிகிறது
அனைத்து தர மக்களின் பிரச்சினைகளை ஆதாரத்தோடு, தோல்லுரித்து காட்டும் எடப்பாடியாரை பற்றி விமர்சனம் செய்யும் ஸ்டாலினுக்கு கழக அம்மா பேரவை கடும் கண்டனம்
எடப்பாடியாரை வசைபாடினால் தன்னை மாவீரன் என்று ஸ்டாலின் நினைத்துக் கொள்கிறார்?
ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் எடப்பாடியாரின் தொண்டரான என்னுடன் விவாதம் செய்ய ஸ்டாலின் தயாரா?
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலின் மீது கடும் தாக்கு
மதுரை மக்கள் விரோத திமுகவின் ஆட்சியில் நடக்கும் தவறுகளை நெஞ்சுரத்தோடு தைரியத்தோடு சுட்டிகாட்டுகின்ற ஒரே தலைவர் எடப்பாடியார் ஆவார்.அவரின் அறிக்கையை ராமன் வில்லிலிருந்து புறப்படுகிற அம்பாக ஒவ்வொரு நாளும் ஸ்டாலினை தொலைத்து எடுக்கிற காரணத்தினால், இன்றைக்கு விரக்தியின் உச்சத்திலே செய்தித்தாள்களை கூட படிக்காமல் எடப்பாடியார் அரைவேக்காட்டுத்
தனத்தோடு என்னை விமர்சிக்கிறார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்றைக்கு எடப்பாடியார் அறிவுபூர்வமான, ஆதரவு பூர்வமாக, மக்கள் விரோத நடவடிக்கைகளை புள்ளி விவரங்களோடு எடுத்து வைத்து மக்களிடத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தி , மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். அவரின் அறிக்கையால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செல்வாக்கு, வளர்ச்சி உயர்ந்து கொண்டே வருவதை உளவுத்துறை மூலம் அறிந்த ஸ்டாலின் அதிர்ச்சியில் விரக்தியில்தொடர்ந்து அரசு விழா,கட்சி விழா,,வீட்டிலும், வெளியிலும் தொடர்ந்து எடப்பாடியாரை விமர்சித்து வருகிறார்.இன்றைக்கு ஸ்டாலின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு எடப்பாடியார் காட்டி வருகிறார் அதனால் இன்றைக்கு விரக்தியின் உச்சமாக ஸ்டாலின் பேசி வருகிறார்
இன்றைக்கு எட்டு கோடி மக்கள் எடப்பாடியாரை நம்பி உள்ளார்கள் எடப்பாடியார் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கின்றாரே அதை (ஸ்டாலின்) உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை? உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஏன் உங்களுக்கு இந்த வயிற்றெரிச்சல்?
ஒரு ஆளுகிற முதலமைச்சர் தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமான பதிலை சொல்ல வேண்டும், ஆனால் நாளாம்தாரமாக பேசினால் மக்களிடம் என்ன பலனும் கிடைக்காது.
எடப்பாடியார் ஒவ்வொரு நாளும் அனைத்து தரப்பு மக்களுடைய பிரச்சனைகளை ஆதாரத்தோடு, புள்ளி விபரத்தோடு, தன் அனுபவத்தின் மூலமாக நாகரீகமாக எடுத்து வைக்கிறார்,அதற்கு உங்களால் பதில் கூற முடியவில்லை என்றால் உங்கள் தோல்வியை ஒப்புக் கொள்கிற ஒரு நிலைதான் மக்கள் இன்றைக்கு பார்க்கிறார்கள்.
ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியில் மக்கள் கோபமாக உள்ளார்கள் என்பது தெரியுமா? மக்கள் மீது இன்றைக்கு இருள் சூழ்ந்து உள்ளது அதை நீங்கள் மறைக்க விளம்பர வெளிச்சத்தில் நீங்கள் வருகிறீர்கள்
இந்தியாவிலேயே நிர்வாகத் திறமையான ஆட்சி என்று நீங்கள் சொன்னீர்கள், ஆனால் இன்றைக்கு கடன் வாங்குவதிலே தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது என்பதை நீங்கள் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்? இந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும், பயனுள்ள திட்டங்களையும் நீங்கள் தரவில்லை
தமிழகத்தின் கடன் சுமையால் தமிழக மக்களின் கோமணம் கூட மிஞ்சாது, தமிழக மக்களின் கோமணத்தை உருவி உங்கள் குடும்பத்திற்கு கோபுரம் கட்ட முயற்சிக்கிறீர்கள்
தந்தையும் ,தனையனுமாகிய நீங்களும், உங்கள் மகனும் நகர்வலம் வருகிறீர்கள் மக்கள் உங்களை ரசிக்கவோ, வரவேற்பதற்கு தாயாராக இல்லை? உங்களை வரவேற்பதற்கு நாதி இல்லை
உங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு என்று நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள் அந்த வரவேற்பிலே அவர்களிடத்திலே நீங்கள் கேட்டுப் பாருங்கள் யாரை பார்க்க வந்தீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லுகிற பதில் தான் உங்களை வரவேற்க வந்தார்களா? அல்லது எதற்கு வந்தார்கள் என்கிற உண்மை எல்லாம் சமூக வலைதளங்களிலே வெளியாகி உண்மையை உலகத்திற்கு பெற்ற வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருக்கிறது
ஆகவே விளம்பர வெளிச்சத்தில் வாழுகிற உங்களுக்கு உண்மையின் வெளிச்சத்தை வருகிற சட்டமன்றத்தில் 2026ல மக்கள் தீர்ப்பு வழங்கி உங்களுக்கு புரிய வைக்கப்பார்கள், 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சியில் மலரும்.
ஆனால் இந்த விளம்பர வெளிச்சம் என்றைக்கும் உங்களுக்கு துணைக்கு வராது. ஆகவே உண்மை வெளிச்சம் படுகிற போது விளம்பர வெளிச்சம் இருள் சூழ்ந்து தோல்வியை தழுவும்.
ஆகவே தொடர்ந்து நீங்கள் எடப்பாடியாரை பற்றி விமர்சித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் கழக அம்மா பேரவை சார்பில் உங்களுக்கு கடும் கண்டனத்தை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்
எடப்பாடியார் உங்களைப் போன்று பிறப்பால் ஆன தலைவர் இல்லை தன் உழைப்பால் தலைவராகி ஆகியுள்ளார் ,ஸ்டாலின் திணிக்கப்பட்ட தலைவர் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது
தொடர்ந்து நீங்கள் எடப்பாடியாரை. விமர்சித்தால் இனியும் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், இன்றைக்கு ஒரு கோடியே 49 லட்சம் வாக்குகளை பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மக்களால் உருவாக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாக பேசுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல, இன்றைக்கு உங்களுடைய உண்மை முகம், சுயரூபம் என்ன என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. எடப்பாடியாரை வசைபாடினால் தன்னை மாவீரன் என்று ஸ்டாலின் நினைத்துக் கொள்கிறார் .
நீங்கள் ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் எடப்பாடியாரின் தொண்டரான என்னுடன் விவாதம் செய்ய தயாராக இருக்கிறீர்களா? நாங்கள் தயார்?
நீங்கள் செல்லும் இடமெல்லாம் அதற்காக பதிலடி நாங்களும், மக்களும் தயாராக இருக்கிறார்கள்
தற்போது இதற்கு முன்னோட்டமாக தஞ்சையிலே விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள் . நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது கருப்புக்கொடி காட்டுவேன் என்று கூறினீர்கள் இன்றைக்கு உங்களுக்கு விவசாயிகள் கருப்புக்கொடி காண்பித்து விட்டார்கள்.
இன்றைக்கு ஐபிஎஸ் அதிகாரியான அருண் இன்றைக்கு தமிழக காவல்துறை சிஸ்டமே சரியில்லை என்று ராஜினாமா செய்து விட்டார் இதுதான் உங்கள் ஆட்சி லட்சணம்?
இன்றைக்கு மக்களே உங்களுக்கு கருப்பு கொடி காண்பிக்கிறார்கள், உங்கள் ஆட்சியில் சிஸ்டம் சரி இல்லை என்று காவல்துறை அதிகாரி ராஜினாமா செய்கிறார், தற்போது உங்கள் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது என கூறினார்.