in

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்


Watch – YouTube Click

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வரும் பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் . வித்தியாசமான குரல் அமைப்பைக் கொண்ட இவர் முகத்திலேயே வில்லத்தனத்தை காட்டி மிரட்டும் நடிகர். கோட்ட சீனிவாசன் ராவ். சாமி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் மூத்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவை சந்திப்பின் ஒரு புகைபடத்தைப் பகிர்ந்ததால் , இணையமே ஒரு கணம் ஸ்தம்பித்தது. வில்லத்தனம் நகைச்சுவைத் என்று அனைத்தையும் உள்ளடக்கிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ்,.. 700க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்தவர். 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். கடைசியாக 2023 இல் சுவர்ண சுந்தரி படத்தில் நடித்தார் . உடல்நிலை மோசம் அடைந்து ஒரு காலில் கட்டும் மற்றொரு காலில் விரல்கள் நீக்கப்பட்ட நிலையிலும் உடல் மெலிந்து கவலைக்கிடமாக காணப்படுகிறார்.

தெலுங்கு சினிமா வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத அத்தியாயம் கோட்டா சீனிவாசன் .கோட்டாவின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த, ஏராளமான நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் அவரது புகைபடத்தை viral ஆக்கிவருகின்றனர். ரசிகர் ஒருவர் அவரை இப்படி ஒரு நிலையில் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. ஆ நலுகுரு படப்பிடிப்பின் போது அவரை ஒரு குழந்தையாக சந்தித்தேன். பகவான் நாராயண் அவரை இந்த நோயிலிருந்து விடுவித்து இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யட்டும் என்று பதிவிட்டுள்ளார்

What do you think?

தலைவன் தலைவி’ படம் வெளியாவதில் சிக்கல்

கைதி 2 படத்தின் ஹிரோயின் இவர்தான்