மாமன் படம் வெற்றி பெற ரசிகர்கள் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
நடிகர் சூரியின் மாமன் படம் வெற்றி பெற ரசிகர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல்
தமிழகமெங்கும் நடிகர் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் வெற்றி பெறுவதற்காக மதுரை நடிகர் சூரி ரசிகர் மன்றம் சார்பாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து மண் சோறு சாப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூறியபோது அப்டேட்டில் அண்ணன் சூரியின் நாளை வெளியாக உள்ள மாமன் படம் வெற்றி பெறுவதற்கு அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்துவிட்டு மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் வைத்துள்ளோம்.
மாமன் படம் மாபெரும் வெற்றி பெற முருகப்பெருமானின் அருளும் அன்னை மீனாட்சி அருளும் கிடைத்திட இன்று முதலில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேண்டுதல் செய்துள்ளதாகவும். சூரி இதுவரை நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் மாமன் படம் இவரது ஐந்தாவது படம்.
இத் திரைப்படம் குடும்ப, சகோதர சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் திரைப்படம். திரைப்படத்திற்கு அனைவரும் சென்று வெற்றி பெறச் செய்யும் வேண்டும் என்றனர்.