in

சன் டிவில திடீர் மாற்றத்தால ரசிகர்கள் கொஞ்சம் குழப்பத்துல இருக்காங்க


Watch – YouTube Click

சன் டிவில திடீர் மாற்றத்தால ரசிகர்கள் கொஞ்சம் குழப்பத்துல இருக்காங்க

 

சன் டிவில காலைல ஆரம்பிச்சு ராத்திரி 11 மணி வரைக்கும் சீரியல் தான் ராஜ்ஜியம் பண்ணுது.

ஆனா, வர்ற பிப்ரவரி 9-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த நேரங்கள் மாறப்போகுது.

நேர மாற்றம் செய்யப்பட்ட சீரியல்கள்: ஆடுகளம் (Aadukalam): ராத்திரி 10 மணிக்கு நிம்மதியா உட்கார்ந்து பார்த்த இந்த சீரியலை இப்போ மதிய நேரத்துக்கு தூக்கிட்டாங்க.

இனிமே மதியம் 3 மணிக்கு தான் ஆடுகளம் வரும். சிங்கப்பெண்ணே (Singapenne): எல்லாரும் ஆவலா எதிர்பார்க்குற நம்ம ஆனந்தி – அன்புவோட சிங்கப்பெண்ணே சீரியல், இனிமே ராத்திரி 9 மணிக்கு வராது. அரை மணி நேரம் தள்ளி இரவு 9.30 மணிக்கு தான் ஆரம்பிக்கும்.

எதிர்நீச்சல் தொடர்கிறது (Ethir Neechal Thodarkirathu): பிரைம் டைம்ல 9.30-க்கு ஒளிபரப்பான இந்த சீரியல், இனிமே லேட் நைட் சீரியலா மாறிடுச்சு. பிப்ரவரி 9 முதல் இரவு 10 மணிக்கு தான் ஒளிபரப்பாகும்.

மூன்று முடிச்சு (Moondru Mudichu): டிஆர்பி-ல நம்பர் ஒன் இடத்துல இருக்குற இந்த சீரியலுக்கு ஒரு செம ஜாக்பாட்! மத்த சீரியல் நேரத்தை குறைச்சுட்டு, இதை மட்டும் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேர ஸ்பெஷலா ஒளிபரப்ப போறாங்க.

இரு மலர்கள் (Iru Malargal): புதுசா ஆரம்பிச்ச இந்த சீரியல் இதுவரை ஒரு மணி நேரம் ஓடிட்டு இருந்தது. ஆனா இப்போ ஆடுகளம் சீரியல் 3 மணிக்கு வர்றதால, இரு மலர்கள் இனிமே அரை மணி நேரம் மட்டும் தான் வரும் (மதியம் 2.30 முதல் 3.00 வரை).

சன் டிவியோட இந்த திடீர் மாற்றத்தால ரசிகர்கள் கொஞ்சம் குழப்பத்துல இருக்காங்க. முக்கியமா ‘எதிர்நீச்சல்’ சீரியலை 10 மணிக்கு மாத்துனது அதோட டிஆர்பி-யை பாதிக்குமான்னு ஒரு பயம் இருக்கு. அதே சமயம் ‘மூன்று முடிச்சு’ ஒரு மணி நேரம் ஓடுறது அந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!


Watch – YouTube Click Shorts

What do you think?

தலைவர் வாயாலயே ‘சூப்பர்’னு சர்டிபிகேட் செம குஷியில் படக்குழு

கர்நாடக அரசின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி டெல்டா மாவட்டத்தை காப்பாற்றிய இயக்கம் வைகோ பெருமிதம்