சமந்தாவிற்கு கோவில் காட்டி ரசிகர்
நடிகை சமந்தா ரூத் பிரபு, திரைப்படங்கள் மூலம் பல ஆண்டுகளாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
ஒரு ரசிகர் சமந்தாவின் 38வது பிறந்தநாளை ஒட்டி அவர் பெயரில் ஒரு கோவிலைக் கட்டியுள்ளார்.
சமந்தா தனது 38வது பிறந்தநாளை திங்கட்கிழமை கொண்டாடினார் , ரசிகர் ஒருவர் ஆந்திராவின் பாபட்லாவில் அவரது நினைவாக ஒரு கோவிலைக் கட்டியுள்ளார்.
தெனாலி சந்தீப் என்ற ரசிகர், சமந்தாவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது பிறந்தநாளில் அனாதைகளுக்கு உணவளித்து வருகிறார்.
சந்தீப் அளித்த பேட்டியில், “என் பெயர் தெனாலி சந்தீப். நான் ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லாவில் உள்ள ஆலபாடு கிராமத்தைச் சேர்ந்தவன். நான் சமந்தா காருவின் மிகப்பெரிய ரசிகன் நான் மூன்று வருடங்களாக சமந்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறேன். இப்போது இந்தக் கோயிலையும் கட்டியுள்ளேன்.
ஒவ்வொரு வருடமும், சமந்தாவின் பிறந்தநாள் அன்று நான் குழந்தைகளுக்கு உணவளித்து, கேக் வெட்டுவேன் என்றார்.