in ,

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் 2025 கொடியேற்றம்


Watch – YouTube Click

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் 2025 கொடியேற்றம்

 

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை 5. 45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிறக் கொடி, அனந்தன், சக்கரத்தாழ்வார், சேனை முதல்வன் ஆகிய உற்சவர்களின் மாடவீதி ஊர்வலம் கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது.

தொடர்ந்து கருட கொடி கோவிலை அடைந்த நிலையில் தேவஸ்தான அர்ச்சகர்கள் கோவில் தங்க கொடி மரத்தில் கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை ஏற்றி வைத்தனர்.

கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது.

இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தனர்

இரவு 9:00 மணிக்கு துவங்கி பிரம்மோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாடவீதிகளில் வைபவமாக நடைபெற்றது.

What do you think?

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மேலூர் பொதுமக்கள் மனு