புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இரண்டாவது முறையாக நடைபெற்றும் சுமூக முடிவு ஏற்படவில்லை.
இதனால் இரு கட்சிகளும் தலைமையின் உதவி நாடி உள்ளன. இதில் திமுக 30 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி திமுக சார்பில் மூன்று பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மட்டும் மணவெளி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளராக அவர் அறிவிக்கப்படாத நிலையில் வேட்பு மனுயை தாக்கல் செய்ததுடன் அன்றைய தினம் மாலையே வாக்கு சேகரிப்பினை தொடங்கினார்.
மணவெளி தொகுதியில் வீடு விதியாக சென்று மக்களிடம் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
எதற்காக இந்த அவசரம்..?
என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு …
இதுவரை இல்லாத மரபை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்துள்ளது. 20 நாள் கூட அவகாசம் கொடுக்காமல் வேட்பு மனு தாக்கல் செய்ய 7 நாட்களும் பிரச்சாரத்துக்கு
10 நாட்களும் இடைவெளி கொடுத்துள்ளது..
குறிப்பாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று விட கூடிய மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகியவற்றை அவசர அவசரமாக முன்னோக்கத்துடன் பாஜக தூண்டுதலின் பேரில் முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் நாங்கள் விறுவிறுப்பாக வாக்கு சேகரிப்பை துவங்கி விட்டோம் என ஆனந்தராமன் தெரிவித்தார்.

