மதுரவாயலில் 1 கொடியை 13 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பரிமுதல்
சட்டமன்றத் தேர்தல் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரவாயில் ஆலப்பாக்கம் மேம்பாலம் அருகே தேர்தல் அதிகாரி குமார் தலைபையில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து பணம் எடுத்துச் செல்லும் தனியார் ஏஜென்சி வாகனத்தை பரிசோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடியே 13 லட்சத்து 61800 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பணம் எடுத்து செல்லும் வாகனத்தில் பரிமுதல் செய்யப்பட்ட பணம் 31 டாஸ்மாக் கடைகளில் வசூல் தொகை மற்றும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணம் எனவும் பரிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவனங்களுடன் பெற்றுக்கொள்ளுவோம் எனவும் கூறினர்.
மேலும் பரிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவணங்களை செலுத்தி படைக்கப் பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.


