முதியவர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பாலவெளி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(75). இவர் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி தனியார் கல்லூரியில் கேண்டின் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் ஏவிசி கல்லூரியில் இருந்து பாலவெளியில் வீட்டிற்கு செல்வதற்காக மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது சாலையில் இடது புறத்திலிருந்து வலது புறம் வீட்டின் அருகே வாகனத்தில் திரும்பும் போது அதிவேகமாக வந்த இந்த வழியில் இருசக்கர வாகனம் வீராசாமியின் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வீராசாமி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அதில் வீராசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஏவிசி கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் திருக்கடையூர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(18) என்ற மாணவன் (YAMHA R 15 )அதிவேக திறன்கொண்ட இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக சாலையில் ஓட்டி வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கல்லூரி மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதிக் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


