பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு குத்தாலம் ரோட்டரி சங்கமும் குத்தாலம் கவிதா ஸ்வீட்ஸ் பேக்கரியும் இணைந்து பொதுமக்கள் 500 நபர்களுக்கு அன்னதான பொட்டலங்களை வழங்கினர்.
நிகழ்வில் குத்தாலம் ரோட்டரி சங்க தலைவர் மூர்த்தி கவிதா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது தொடர்ந்து குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குத்தாலம் ரோட்டரி சங்கம் சார்பில் சங்கத் தலைவர் மூர்த்தி தலைமையில் முன்னாள் பொருளாளர் ராமலிங்கம் ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சித்ரா,பொருளாளர் மோகன் உள்ளிட்ட குத்தாலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


