in

முருகன் கோவன கோலத்தில் இருப்பாரே தவிர, ஆர்எஸ்எஸ் அரை டவுசர் அணியமாட்டார் கல்வித்துறை அமைச்சர் பேச்சு

முருகன் கோவன கோலத்தில் இருப்பாரே தவிர, ஆர்எஸ்எஸ் அரை டவுசர் அணியமாட்டார் கல்வித்துறை அமைச்சர் பேச்சு

 

எங்களுடைய முருகன் கோவன கோலத்தில் இருப்பாரே தவிர, ஆர்எஸ்எஸ் அரை டவுசர் அணியமாட்டார் தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேச்சு.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எழுதிய, தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை நூலின் திறனாய்வு கூட்டம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தமிழ் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அப்போது பாஜகவினர் வேலை கையில் எடுத்தார்கள். அப்போது நாம் தான் வெற்றி பெற்றோம். இப்போது முருகனை கையில் எடுத்துள்ளார்கள்.

கண்டிப்பாக 2026ல் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். எங்களுடைய முருகன் கோவன கோலத்தில் இருப்பாரே தவிர, ஆர்எஸ்எஸ் அரை டவுசர் அணியமாட்டார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஒளி தரக்கூடிய கல்வி மாநிலமாக தமிழகம் என்றைக்கும் விளங்கி வருகிறது என்றார்.

What do you think?

களைக்கொல்லி மருந்தை தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையில் அறிமுகப்படுத்தினர்

பாபநாசத்தில் செல்வமகா காளியம்மன் ஆலய, 20-ஆம் ஆண்டு காளி திருநடன திருவிழா..