வடலூர் நகர திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ராகவேந்திரா சிட்டி பகுதியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் நகர செயலாளர் தன. தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் ஆகிய பிரிவுகளில் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் கலந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்
மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.


