டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளையவேந்தர் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம்
டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளையவேந்தர் ஆகியோர் கலந்து கொள்ளும், திருக்கோவிலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி மாபெரும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் கட்சியின் தலைவர் இளையவேந்தர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து திருக்கோவிலூர் பார்க்கவ குல உடையார் திருமண மண்டபத்தில், தொகுதி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூர் தொகுதி மாவட்ட தலைவர் காமராஜ் தலைமையில்,மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளவேந்தர் ஆகியோருக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்வது ஆலோசனை வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட கௌரவ தலைவர் சுனில்குமார், ரிஷிவந்தியம் தொகுதி மாவட்ட தலைவர் பொன்முடி, திருக்கோவிலூர் தொகுதி மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல்,இலக்கிய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட வேந்தர் பேரவை செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


