in

 வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி

 வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி

 

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ்  தஞ்சை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது.

தமிழ்நாடு முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மண்,மொழி ,மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் வகையில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பரப்புரை திட்டத்தினை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தி.மு.க.வில் 2 கோடி பேரை உறுப்பினராக சேர்க்கும் வகையில் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளும் பணிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் கூட்டுறவு காலனி பகுதியில் மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன் இன்று காலை ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பரப்புரை செய்தார்.

மேலும் தொடர்ந்து தி.மு.க அரசின் நல்லாட்சி தொடரவும் ஓரணியில் இணைவதின் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறி அவர்களின் விருப்பத்தின் பேரில் படிவங்களை வழங்கி புதிய உறுப்பினர்களை சேர்த்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர்களை பதில் அளிக்க கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் வாசிம் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

அப்போது பொதுமக்களிடம் ஆறு கேள்விகளுக்கு பதில் பெற்று அதனை பதிவு செய்தனர். செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் அவர்களது விருப்பத்தின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டு ஓடிபி பெறப்பட்டு அதன் பின் உறுப்பினராக ஆன்லைன் வழியாக இணைக்கப்பட்டனர்.

உறுப்பினர் இணைந்ததற்கான குறுந்தகவல் அவர்களது செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

What do you think?

ஆஷாட நவராத்திரி விழா 8 ஆம் நாள் வெண்ணெய் அலங்காரம்

அஜித் குமாரின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்