விருத்தாசலத்தில்,மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
நிதி இல்லை- 100 நாள் வேலை இல்லை, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசையும், துணை போகும் அதிமுகவை கண்டிப்பதாக கூறி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,விசிக காங்கிரஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி மாவட்ட, நகர,ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்று,அமெரிக்க விளைபொருள் விற்பனைக்கு அனுமதிக்காதே,மாநில அரசின் மீது நிதிச் சுமையை சுமக்காதே,மத்திய அரசே தமிழ்நாட்டை வஞ்சிக்காதே,தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்காதே,100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தாதே,மாநில அரசுக்கு முறையாக நிதி வழங்கிடு என்று கூறி ,மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


