in

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

 

மயிலாடுதுறை மணக்குடி கிராமத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு, கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் 5183 சதுர.மீ.பரப்பளவில் மயிலாடுதுறை நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையமானது 28 பேருந்துகள் நிற்கும் வகையிலும், 49 கடைகள், 10 பயணிகள் காத்திருக்கும் இடம், பொருட்கள் வைப்பறை 1, உணவகங்கள் 2, தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் 2, முன்பதிவு நிலையம் 1, நேரம் காப்பாளர் 2, காவல்துறை அறை 1, கட்டுப்பாட்டு அறை1, நவீன வசதிகளுடன் கூடிய 32 இலவச கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் 2 ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டும் என பொறியாளரிடம் அறிவுறுத்தினார். இவ்வாய்வின்போது, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார், மற்றும் அரசு துறைச் சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

What do you think?

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆனி திருத்தேர் திருவிழா

காதணி விழாவிற்கு 51 வகையான சீர் செய்த தாய்மாமன்