in

பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

 

பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….

திருவண்ணாமலை மாவட்டம் அடிஅண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் அருகே நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க சிரமம் உள்ளதாகவும், தங்களது கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து வேடியப்பனூர் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்கப்பட்டது. இந்த பகுதி நேர நியாய விலை கடையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இன்று முதல் 224 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் மானிய விலையில் விழசாயி அருணாச்சலத்திற்கு டிராக்டர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

சினிமா வேற, ஸ்போர்ட்ஸ் வேற – ‘தல’ அஜித்

செல்லாண்டியம்மன் கோவில் மாசித் திருவிழா