in

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மறுபடியும் விஜய் சேதுபதி கூட கைகோர்த்திருக்காரு


Watch – YouTube Click

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மறுபடியும் விஜய் சேதுபதி கூட கைகோர்த்திருக்காரு

 

‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலமா இந்திய சினிமாவையே அதிர வச்ச இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இப்போ மறுபடியும் நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கூட கைகோர்த்திருக்காரு.

படத்தோட டைட்டிலே ரொம்ப வித்தியாசமா ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel)-னு வச்சிருக்காங்க.

சென்னையில இன்னைக்கு இந்த படத்தோட சூட்டிங் பூஜையோட கோலாகலமா ஆரம்பமாகிடுச்சு.

படத்துல இருக்குற சில “வெயிட்டான” விஷயங்கள் இதோ: இந்த படத்துக்கு நம்ம இளையராஜா சார் தான் மியூசிக் பண்ணப்போறாரு.

தியாகராஜன் குமாரராஜாவோட மேக்கிங், விசே-வோட நடிப்பு, ராஜாவோட இசை.. இந்த காம்போவை நினைச்சாலே இப்போவே எதிர்பார்ப்பு எகிறிடுச்சு!

விஜய் சேதுபதிக்கு ஜோடியா மாளவிகா மோகனன் நடிக்கிறாங்க. அப்புறம் கன்னடத்துல மிரட்டலான நடிகரான ராஜ் பி ஷெட்டி இந்த படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு வில்லனா என்ட்ரி கொடுக்குறாரு.

பணக்கட்டுகளோட ஒரு மனுஷன் பெரிய பள்ளத்துல விழுகுற மாதிரி இருக்குற அந்த போஸ்டர் இப்போ சோஷியல் மீடியால செம வைரல். “பணம் படுத்தும் பாடு” தான் கதையோட கருவா இருக்கும்னு பேசிக்கிறாங்க!


Watch – YouTube Click Shorts

What do you think?

அண்ணாமலையார் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

‘தளபதி’ விஜய் சின்ன வயசு போட்டோ வைரலாகுறது