in

இயக்குனர் நாகேந்திரன் மறைவு… திரைத்துறையினர் அதிர்ச்சி

இயக்குனர் நாகேந்திரன் மறைவு… திரைத்துறையினர் அதிர்ச்சி

 

அடுத்தடுத்த திரைத்துறையினரின் மரணம் பிரபலங்களை வருத்தத்தில் ஆழ்திய நிலையில் மீண்டும் ஒரு இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் உறையவைத்திருகிறது.

பல இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் நாகேந்திரன் இவர் 2015 ஆம் ஆண்டு காவல் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

விமல் கதாநாயகனாக நடித்த இந்த படம் வெற்றி பெறவில்லை அதன் பிறகு இயக்கத்தை கைவிட்ட இவர் மற்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இயக்குனர் நாகேந்திரன் உயிரிழந்து உள்ளார். இவரின்’ இறப்பு செய்தியை கேட்ட தயாரிப்பாளர் காமாட்சி x தளத்தில் தனது இரங்களை பதிவிட்டுள்ளார்.

அன்பு நண்பனான நாகேந்திரன் இறப்பு செய்தியை கேட்டு துயரமான நாளே துவங்கி இருக்கிறேன், நாட்களும் நொடிகளும் மிகக் கொடுமையானவை பூவை உதிர்த்து போடுவது போல நமக்கு நெருக்கமானவர்கள் பிரிந்து சென்று விடுகிறார்கள் நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வேதனை.

காலம் யாருக்கு என்ன செய்ய காத்திருக்கிறதோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது . நெருங்கிய நண்பனாய் பணித்தவரை சட்டென்று இழந்து போனதில் நெஞ்சம் கலங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.

What do you think?

பல நாள் பாரத்தை இறக்கி வைத்த நடிகர் வடிவேலு

Decades-களாக கோலிவுட் இல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கமர்சியல் குதிரை… சுந்தர்.சி