ஓலைச்சுவடியில் வேண்டுதல்களை எழுதி, யாக குண்டத்தில் போட்டு வழிபாடு செய்த பக்தர்கள்.
திண்டுக்கல் அருகே அமாவாசையை முன்னிட்டு ஓலைச்சுவடியில் வேண்டுதல்களை எழுதி, யாக பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கைதட்டி வழிபாடு.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி, சாணார்பட்டி அருகேயுள்ள மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் அமாவாசை தினத்தில் பிரத்தியங்கிரா தேவி, மிளகாய் யாகம் திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி யாக குண்டம் வளர்க்கபட்டு இதில் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும், திருமண நடைபெறதா ஆண், பெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், குடும்பத்தில் இறந்தவர்கள் மோட்சம் பெறவேண்டும் உள்ளிட்டவைகள் நிறைவேற வேண்டும் என்று எண்ணி 50க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்கி கோ பூஜை நடந்தது.

தொடர்ந்து, மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரத்தியங்கிரா தேவி அம்மன், பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாககுண்டத்தில் மிளகாய் வத்தலை போட்டு பிரத்தியங்கிரா தேவி யாகம் உலக நன்மை வேண்டி நடத்தப்பட்டது.
அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்யும் விதமாக ஓலைச்சுவடியில் தோஷம் நீங்க கோரிக்கைகளை எழுதினார். இதன் சிறப்பு அம்சமாக யாகத்தில் பங்கேற்ற பக்தர்கள் முன்னோர்களின் தோஷம் நீங்க வழிபாடு செய்தனர்.
இதில் மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி யாக குண்டத்தில் போட்டு வழிபாடு செய்தனர்.


