மாசி பெரு விழாவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 66 லட்சம்
இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்
இந்நிலையில் கடந்த மாசி பெருவிழா 14-நாள் நடைபெற்றது.
இதில் மயான கொள்ளை தீமிதி, திருத்தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்கள் விமர்சையாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வேண்டுதலாக பல்வேறு பொருட்களை செலுத்தி இருந்தனர். அவ்வாறு பக்தர்கள் உண்டிகளில் செலுத்திய காணிக்கைகளை என்னும் பகுதியானது நேற்று திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு காணிக்கையாக
ரொக்கம் ரூபாய் -66,97,350– தங்கம் -74 கிராம்,
வெள்ளி -730 கிராம், உள்ளிட்டவைகளை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டி என்னும் பணியும் போது மேல்மலையனூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு (எ)ஏழுமலை, அறங்காவலர்கள்,சுரேஷ், மதியழகன்,பச்சையப்பன், செல்வம், வடிவேல், சந்தானம், கோவில் மேலாளர் சதீஷ் ,காசாளர் மணி கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


