பணிகளில் முறைகேடு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை
திருமங்கலம் தொகுதியில் மத்திய, மாநில நிதியின் கீழ் நடைபெற்று பணிகளில் முறைகேடு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை
மதுரைக்கு வரும் உதயநிதி ஆய்வை மேற்கொள்ளும்போது கண்துடைப்பாக நடத்தக்கூடாது தவறு செய்வது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
மக்களோடு மக்களாக சேர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தரையில் அமர்ந்து கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
திருமங்கலம் தொகுதியில் மத்திய, மாநில அரசின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது .இதில் முறைகேடு இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் உள்ள அழகு நாச்சியார் ஊரணியில் 70 லட்சம் மதிப்பில் தூர்வாரி சுற்றுசுவர் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்று முடிந்தது.
தற்போது அதில் சுற்று சுவர் ஒரு பகுதி கீழே விழுந்தது இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து டி கல்லுப்பட்டியில் உள்ள அழகு நாச்சியார் ஊரணியில் உள்ள கரையில் மக்களோடு, மக்களாக சேர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இது குறித்து அவர் கூறியதாவது ,
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு ஆய்வு கொள்ள வருகிறார் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பத்து தொகுதிகளில் ஆய்வை மேற்கொள்கிறார் அவரது கவனத்தில் ஈர்க்கும் வகையில் தற்போது கவனயீர்ப்பு தர்ணாபோராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டி பேரூராட்சி உள்ள அழகு நாச்சியார் ஊரணியில் 50 லட்சம் மத்திய அரசு நிதியும் ,20 லட்சம் பொது நிதியில் என 70 மதிப்பீட்டில் தூர்வரப்பட்டது. இதில் தரமற்ற முறையில் கட்டியதால் சுற்று சுவர் கீழே விழுந்து விட்டது.அந்த பகுதியில் ஆள் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை .அந்த பகுதியில் ஆட்கள் இருந்தால் எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்.
அதேபோல மூப்பனூர் ஊராட்சியில் 78 லட்சம் பணிகள் நடைபெற்று வருகிறது அதுவும் தரமற்ற பணிகளாக உள்ளது. பண்டாரக்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆறு கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் கழிவுநீர் உள்ளே செல்லவும் வெளியே செல்லவும் உள்ள பணிகள் நடைபெறுகிறது இதில் கழிவுநீர் வெளியே செல்ல எந்த திட்டமும் இதில் இல்லை. தொடர்ந்து இதுபோன்ற திட்ட பணிகள் முறைகேட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியருக்கும், செயலாளருக்கும் கடிதங்களை நாங்கள் அனுப்பி வருகிறோம்.
அதேபோல திருமங்கலம் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது, தொடர்ந்து அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தாலும் அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டதாக உள்ளது.
குறிப்பாக திருமங்கலம் தொகுதியில் உச்சப்பட்டி, மறவன்குளம், தங்களா சேரி, பூலாம்பட்டி, மருதங்குடி வெள்ளங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் வண்டல் மண்கள் திருடப்பட்டு வருகிறது .மக்களே போராட்டம் செய்கிறார்கள் அதேபோல கள்ளிக்குடி பகுதியில் கோழி கழிவுகள் அதிகமாக கொட்ட போட்டு வருகிறது இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
பள்ளிகளில், கோயிலில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது இதே அதிமுக ஆட்சியில் நாங்கள் அமைக்காமல்இருந்தோம் .தற்போது அமைக்கப்பட்டு வருகிறது அதே போல பிரதான சாலைகளில் டாஸ்மார்க் கடை அமைக்க கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது இன்றைக்கு நீதிமன்றம் உத்தரவை மீறி இன்றைக்கு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் மதுரைக்கு வரும் துணை முதலமைச்சர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் இயற்கை கொடையாக உள்ள கனிமவளத்தை கொள்ளை அடிக்க கூடாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் அவர்கள் மீது எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல சாலையில் எல்லாம் தரம் அற்றதாக உள்ளது இதனால் சாலைகள் கடுமையாக சேதாரம் அடைந்துள்ளது.
மதுரைக்கு ஆய்வு மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கண் துடைப்பாக ஆய்வை மேற்கொள்ளக்கூடாது, ஆகவே தான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக இன்றைக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நிர்வாக சீர்கேடு உள்ளது.
நடைபெற்று வரும் திட்டப் பணிகளில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாங்கள் ஆய்வை மேற்கொண்டு பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம் .ஆனால் ஆளுங்கட்சிகள் அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார்.


