in

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதான அறுசுவை உணவு வழங்கப்பட்டது

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதான அறுசுவை உணவு வழங்கப்பட்டது

 

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூப்பல்லக்கின் போது கையில் பணம் இருந்தும் சாப்பிட கடைகள் இல்லாமல் தவித்து வரும் திருவிழாவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அன்னதானமாக அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் இன்ஜினியர் கமலக்கண்ணன் வருடம் தோறும் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் தங்க குதிரையில் அழகர் ஆற்றில் இறங்கச் செல்லும் போதும் அழகர் மீண்டும் அழகர் மலைக்கு செல்ல பூ பல்லக்கில் பவனி வரும் பொழுதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.

இந்த வருடமும் அதே போல் மதுரை தல்லாகுளத்தில் உள்ள ரெங்கா பிளானர்ஸ் அலுவலகத்தின் முன்பாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதான அறுசுவை உணவு வழங்கினார்.

 

மேலும் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் திருவிழாவிற்காக உணவகங்கள் அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் காவல்துறையினர் மற்றும் சுவாமி ஊர்வல பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மற்றும் சுவாமி தூக்குபவர்கள் உள்ளிட்டவர்கள் கையில் காசு இருந்தும் சாப்பிட கடைகள் இல்லாமல் தவித்து வரும் திருவிழா நேரத்தில் அன்னதானமாக அறுசுவை உணவு வழங்குவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என ரெங்கா பிளானர்ஸ் மேனேஜிங் டைரக்டர் கமலக்கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தார் அவரது அலுவலக பணியாளர்கள் தெரிவித்தனர்.

What do you think?

கள்ளழகர் சித்திரை திருவிழா – கால்மேல் கால் போட்டு ராஜாங்க அலங்காரம்

வைரவன் கோவில் கிராமத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி பெருவிழா