தஞ்சை பெரியக்கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையில் நடனம் ஆடி ரில்ஸ் பதிவிட்டு
தஞ்சை பெரியக்கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையில் கோவிலுக்குள் பனராஸ் பட்டுக்கட்டி மல்லிகைப் பூ கொண்டை வச்சி, சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா என்ற பாடலுக்கும், மதுரைக்கு போகாதடி ஆகிய பாடலுக்கு 3 இளம் பெண்கள் நடனம் ஆடி ரில்ஸ் பதிவிட்டு இருக்கிறார்கள்.

கோவில் பாதுகாப்புக்கு போலீசார், தனியார் காவலாளிகள் என 25 பேர் உள்ள நிலையில் இது போன்று பெண்கள் நடனம் ஆடி வீடியோ எடுப்பதை ஒருவர் கூட கண்டிக்கவில்லையா என கேள்வி எழும்பி உள்ளது.
உலகப்புகழ்ப் பெற்ற தஞ்சை பெரியக்கோவில் எழில்மிகு அழகை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெரியக்கோவிலில் சித்திரை பெருவிழா ஆஷாட நவராத்திரி விழா, பிரதோஷம், கிரிவலம், என ஆண்டு முழுவதும் விஷேசங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இத்தகைய சிறப்புமிக்க புண்ணிய தலமான பெரியக்கோவில் உள் பிரகாரத்தில் விமான கோபுரம் முன்பு 3 இளம் பெண்கள் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்டு உள்ளனர்.
கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் இது போன்ற செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கோவில் பாதுகாப்புக்கு போலிசார் மற்றும் தனியார் காவலாளிகள் இருந்தும் எவரும் கண்டுக் கொள்ளவில்லை கண்டிக்கவும் இல்லை என்பதுதான் வேதனையாக உள்ளது என்றனர் பக்தர்கள்.


