Coolie First Single Chikitu out
நடிகர் ரஜினிகாந்த், சுருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா நடிப்பில் விரைவில் வர இருக்கும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அனிருத் இசை அமைத்த சிக் கீட்டு (Sikkitu) முழு பாடல் நேற்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டது.
அறிவுமதி எழுதிய இப்பாடலை அனிருத்துடன் இணைந்து டி ராஜேந்தர் மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.
பாடலுக்கு ரஜினிகாந்த் உடன் இணைந்து டி ராஜேந்தர் அனிருத் ஆகியோர் நடனம் ஆடி உள்ளனர்.
இந்த பாடல் தற்பொழுது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


