in

ரூபாய் 3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டியும் பலனில்லை

ரூபாய் 3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டியும் பலனில்லை

 

செஞ்சி அருகே வராக நதியின் குறுக்கே ரூபாய் 3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டியும் பலனில்லை என பொதுமக்கள் புகார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் – தென்பாலை வழியாக மேல்மலையனூர் செல்லும் சாலையின் இடையே வராக நதி அமைந்துள்ளது.

இந்த வராக நதியில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் ரெட்டிப்பாளையத்தில் இருந்து ஆற்காம்பூண்டி,தென்பாலை, வடபாலை, தொரப்பாடி, மேல்மாம்பட்டு, மேல்மலையனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 முதல் 15 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் நிலவி வந்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதேபோல் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

மேலும் விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல், கரும்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமம் அடைந்து வந்தனர்.

இதேபோல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் பக்தர்கள் பல கி.மீ சுற்றி செல்லும் நிலை காணப்பட்டது.

இதனால் இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வராக நதியின் குறுக்கே ரூ.3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டது.

ஆனால் முறையான திட்டமிடல் இல்லாததால் மேம்பாலத்தை 100 மீட்டர் நீளத்திற்கு கட்டாமல் 50 மீட்டர் நீளம் வரை மட்டுமே பெயரளவிற்கு கட்டப்பட்டுள்ளது.

என்றும் இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த மேம்பாலத்தை தாண்டி வெள்ளநீர் சாலையை மூழ்கடித்தவாறு ஆர்ப்பரித்து ஓடும் என்பதால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே இந்த புதிய மேம்பாலம் கட்டியும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த மேம்பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு உள்ளதாகவும் மேம்பாலத்தின் சில இடங்களில் விரிசல் காணப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கள் பயன்படும் வகையில் மேம்பாலத்தின் நீளத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும் மேம்பாலம் அருகே ஆர்க்காம்பூண்டி கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு சாலையை பள்ளம் தோண்டி அப்படியே விட்டு சென்று விட்டதாகவும் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறையினர் தென்பாலை ஏரி பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும், ஏரிக்கரை மண் பாதையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி மேல்மலையனூர் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் வாகனங்கள் தென்பாலை கிராமத்திற்கு உள்ளே செல்லாமல் ஊருக்கு வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி பேரணி

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது