நீட் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 27 வது இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பெற்ற நிலை மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து இருதயவியல் அல்லது நரம்பியல் துறையில் மருத்துவராக வேண்டும் என்பதே எண்ணம் என மாணவன் சூரிய நாராயணன் பேட்டி.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் சுப்புலட்சுமி தம்பதியினரின் இரண்டாவது மகன் சூரிய நாராயணன் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து 500க்கு 495 மதிப்பெண் பெற்றதுடன் ஜேஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தார் இந்த நிலையில் கடந்த மாதம் தேசிய தேர்வு முகமையின் மூலம் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்விலும் பங்கேற்று 720 மதிப்பெண்ணுக்கு 665 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
இது இந்திய அளவில் 27 வது இடமும் தமிழக அளவில் முதல் இடமும் ஆகும் தமிழக அளவில் முதல் மதிப்பெண்ணை பெற்ற மாணவனுக்கு அவர் பயின்ற பள்ளி தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கோப்பைகளை பரிசுகளாக வழங்கினார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணவன் சூரிய நாராயணன் தேசிய அளவில் 27 வது இடமும் மாநில அளவில் முதலிடமும் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது படிக்கும் போது எந்த விதமான கவன சிதறல்கள் இல்லாமல் படித்து வந்ததாக தெரிவித்தார் எந்தவிதமான பொழுதுபோக்கிற்கும் இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டுமே தனிக் கவனம் செலுத்தி படித்து வந்துள்ளதாக தெரிவித்தார்
எனது முழு எண்ணமும் எய்ம்ஸ் டெல்லியில் படிக்க வேண்டும் நரம்பியல் அல்லது இறுதிவைகள் மருத்துவராக ஆக வேண்டும் என்பதை ஆகும். சிறுவயதிலேயே கடவுளின் கிருபை முழுவதும் கிடைத்துள்ளது நான் எப்போது சோர்வானாலும் எனது தாயும் தந்தையும் என்னை சோர்வடையா விடாமல் ஊக்குவித்துக் கொண்டே இருப்பார்கள். ஆசிரியர்களும் எந்த விதமான சந்தேகம் ஏற்பட்டாலும் உடனுக்குடன் அதனை தீர்த்து வைத்து எனக்கு ஊக்கத்தை அள்ளித் தந்தார்கள். நீட் தேர்வை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் போட்டி தேர்வுகள் இருந்தால் தான் சிறந்த மருத்துவர்கள் உருவாக முடியும் பயத்தை தள்ளி வைத்துவிட்டு நன்றாக படித்துக் சிறப்பாக தேர்வு எழுதினால் வெற்றி நமக்கு கிடைக்கும் தேர்வுகளில் பயத்தை தள்ளி வைத்துவிட்டு சிறப்பாக அதில் முயற்சி செய்தால் வெற்றி தானாக கிடைக்கும். எந்த கவனமும் இல்லாமல் சிறப்பாக படித்துக் கொண்டே இருந்தால் வெற்றி தானாக வரும் என அவர் தெரிவித்தார்