in

தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவை கைது செய்ய கூறி புகார் மனு

தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவை கைது செய்ய கூறி புகார் மனு

 

தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவை கைது செய்ய கூறி அதிமுகவினர் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவதூறு செய்யும் நோக்கிலும் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி ஆர் பி ராஜா தலைமையில் பல்வேறு வகையான கார்ட்டூன் சித்தரிப்பு படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகழை, நற்பெயரை கெடுக்கும் அவதூறு செய்தியாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் பேஸ்புக் மற்றும் x தளம் போன்ற செயல்களின் மூலமாக கடந்த வாரமாக வெளியிடப்பட்டு பரவி வருகிறது.

இதனை கண்டித்து அதிமுகவினர் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அவதூறு பரப்பும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும் அவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

What do you think?

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்.

குபேரா … வசூலில் குபேரனாவாரா… குபேரா Movie Review